பாரத கண்டம் என்பது இந்து புராணங்கள் மற்றும் காவியங்களில் குறிப்பிடப்படும் இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிக்கும் ஒரு சொல்; இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகள் அடங்கும், இது இமயமலைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கு மேலே அமைந்திருக்கும் புவியியல் மற்றும் கலாச்சாரப் பகுதியாகும்.
பாக்கிஸ்தான் – 1947
வங்கதேசம் – 1971
மியான்மர் (பர்மா) – 1937
இலங்கை (சிலோன்) – 1948
ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்தது பிரிந்ததாக கூறப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை தேடி வருகிறோம்.
நாடு முழுவதும் ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் ஆங்கில அரசு இந்திய நாட்டை விட்டு வெளியேறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டது. கி.பி. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, இங்கிலாந்து நாட்டில் தொழிற்கட்சிபெரும்பான்மை பெற்று அமைச்சரவை அமைத்தது. இந்தியாவில் விடுதலை போராட்டம் உச்சகட்டத்தில் இருந்ததாலும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் இராணுவத்தின் மூலம் ஆங்கிலேயருடன் சண்டையிட வெளிநாட்டிலிருந்தபடி தயாராகினார். இரண்டாம் உலகபோர் மற்றும் நேதாஜி இராணுவ நடவடிக்கை ஆங்கிலேயருக்கு பயத்தை உருவாக்கியது. அதனால் இந்திய விடுதலைக்கான தீர்மானத்தை இந்த அமைச்சரவை கொண்டு வந்தது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா பாரதம், பாகிஸ்தான் என இரு கூறுகளாக்கப் பிளவுபட்டு சுதந்திரம் அடைந்தது. அப்போது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஜின்னா தலைமையில் இஸ்லாமியர்களுக்கு தனி நாடுவேண்டும் என்று கூறி பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கி இந்தியாவில் இருந்து பிரிந்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், சரோஜினி நாயுடு போன்ற தேசிய தலைவர்கள், ராணி லட்சுமிபாய், மங்கல் பாண்டே போன்ற புரட்சியாளர்கள், மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார், வேலு நாச்சியார், வாஞ்சிநாதன், ராஜாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற எண்ணற்ற தலைவர்கள், வீரர்கள், பெண்கள் எனப் பலரும் பல்வேறு வழிகளில் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரையும், வாழ்வையும் அர்ப்பணித்தனர்.
பகத் சிங்: புரட்சிகர வழியில் போராடி, இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்தார்.
சுபாஷ் சந்திர போஸ்: இந்திய தேசிய இராணுவத்தை (INA) அமைத்து, வெளிநாடுகளின் உதவியுடன் சுதந்திரத்திற்காகப் போராடினார்.
சர்தார் வல்லபாய் படேல்: இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை: ஆங்கிலேயருக்கு எதிராக 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' என்று போற்றப்படுகிறார்.
சுப்பிரமணிய பாரதியார்: கவிஞர், எழுத்தாளர், விடுதலைப் பாடல்கள் மூலம் மக்களை எழுச்சியூட்டினார்.
வாஞ்சிநாதன்: ஆங்கிலேய அதிகாரி ராபர்ட் வில்லியம்ஸ் ஆஷை சுட்டுக் கொன்ற தியாகி.
வேலு நாச்சியார்: இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராளி (18-ஆம் நூற்றாண்டு).
மன்னர் அழகுமுத்துக்கோன்: ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட முதல் மன்னர்.
ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக இந்தியாவிற்க்கு 1608-ல் சூரத் துறைமுகத்தில் முதலில் வந்திறங்கினர். கிழக்கிந்திய கம்பெனி 1600-ல் தொடங்கப்பட்டு, இந்தியாவில் வர்த்தகத் தளங்களை அமைத்து, படிப்படியாக தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்தி, 1757-ல் பிளாசி போருக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றத் தொடங்கினர். பின் ஆங்கிலேயர்கள் ஆட்சியை நிறுவி 1947 வரை அட்சிசெயதனர்.
1947 ஆகஸ்ட் 15 இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திர இந்தியாவை உருவாக்கியது. சுதந்திரத்திற்க்கு போராடியதில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பல சுதந்திர போராட்டகாரர்கள்.
இப்ராஹிம் லோடி டெல்லி சுல்தானகத்தின் கடைசி சுல்தான் மற்றும் லோடி வம்சத்தின் இறுதி ஆட்சியாளர் ஆவார். இவர் 1517 முதல் 1526 வரை ஆட்சி செய்தார். பாபர் தலைமையிலான முகலாயப் படையெடுப்பால் பானிபட் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். முகலாயர்கள் கி.பி. 1526 ஆம் ஆண்டு பாபர் தலைமையில் நுழைந்து இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினர். இவர்கள் இந்து மதத்தை எதிர்த்தும் செல்வங்களை கொள்ளையடித்தும் கத்தி முனையில் மதமாற்றமும் செய்து ஆட்சி செய்தததாக கூறப்படுகிறது. மேலும் இந்துகளின் வழிபாட்டு தளங்கள் அழிக்கப்பட்டும் சேதபடுத்தபட்டதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி சுல்தானகம் என்பது 1206 முதல் 1526 வரை இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட ஒரு இஸ்லாமியப் பேரரசு. இது குதுப்-உத்-தின் ஐபக்கால் நிறுவப்பட்டது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வந்திருக்க கூடும்.
மௌரியர்கள், குஷானர்கள், சாத்தவாகனர்கள், குப்தர்கள், சுல்தான்கள், முஹலாயர்கள், மராத்தியர்கள், டச்சுகாரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள்., சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள்.
ஆரியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ஸ்கிதியர்கள், குஷானர்கள், ஹுணர்கள், இஸ்லாமியர்கள், முஹலாயர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுகாரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள், ஐரோப்பியர்கள்.
பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள்
மௌரியர்கள், சாதவாகனர்கள், காளிங்கர்கள், இலங்கை அரசர்கள், சாளுக்கியர்கள், ராஷ்ட்ரகூடர்கள், சுல்தானியர்கள், பாளையக்காரர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுகாரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள்.
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராஸ் மாகாணம் மதராஸ் மாநிலம் ஆனது. தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராஸ் மாநிலத்தின் கீழ் வந்தது. 1953இல் மதராஸ் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராஸ் மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராஸ் மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1968இல், மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று.
சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, சி.வி.ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், சீனிவாச ராமானுஜன், அப்துல் கலாம் முதலியோர் மாநிலத்தின் பிரபலமானவர்களுள் சிலராவர். இவர்களோடு, கண்ணகி, திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், இராஜராஜ சோழன் போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களுள் சிலர்.