பார்க்கவகுலம் (சுருதிமான், மலையமான், நத்தமான்) மூன்று உட்பிரிவு மக்களை கொண்ட ஒரு சமூகம். இவர்கள் உடையார், மூப்பனார், நயினார் என்றும் அழைப்படுகின்றனர். இவர்களின் முன்னோர்கள் குறுநில மன்னர்களாகவும் அரசாண்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சத்திரியர்கள் ஆவார். பிற்காலத்தில் பார்க்கவகுல மக்கள் நிலவுடமை சமுதாயமாகவும் விவசாய தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
● “தெய்வீகராஜனின் மக்கள் சுருதிமன்னர் குலசேகரன், மலையமன்னர் நரசிங்க முனையரையர், நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார், என்ற மூவர் வழி வந்தவர்கள் சுருதிமான், மலையமான், நத்தமான். அதில் மலையை ஆட்சி செய்தவர் மலையமன்னர் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமன்னர் எனவும், மண்ணும், மலையும் ஆள்பவர், கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமன்னர் எனவும் வழங்கப்பட்டார்கள்.”
● புறநானூற்று பாடல்களில் இந்த சமுதாயம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்ற கருத்தும் இருக்கின்றன.
●செப்பேடுகள், கல்வெட்டு ஆதாரங்கள், நூல்கள் போன்றவற்றிலும் இந்த சமுதாயம் சாந்த குறிப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
● வரலாற்று ஆவணங்கள் படையெடுப்புகளினால் அளிக்கப்பட்டும் சேதமடைந்தும் பராமரிக்க படாததாலும் சமுதாயத்தின் முழு வரலாறு மற்றும் முன்னோர்கள் பற்றி அறியமுடியாதபடியாக குழப்பங்கள் காணப்படுகிறது.
பார்க்கவகுலம் மூன்று உட்பிரிவு (சுருதிமான், மலையமான், நத்தமான்) மக்களை கொண்ட நிலவுடைமை சமுதாயம். பாரதத்தின் (அ) தற்போதைய இந்தியாவின் தென்பகுதியில் பரவலாக பார்க்கவகுல மக்கள் தற்போது வாழ்கின்றனர். சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களே பார்க்கவகுலத்தவர்கள் ஆவர். பார்க்கவகுலத்தை (உட்பிரிவு: சுருதிமான், மலையமான், நத்தமான்) உயர்வகுப்பு சமுதாயம் நிலவுடமை சமுதாயம் என்று குறிப்பிட்டனர்.
பார்க்கவகுல மக்களை உடையார். நயினார், மூப்பனார் என்றும் அழைப்பார்கள். (“குறிப்பு: வேறு சில குடி சமுதாய மக்களுக்களையும் உடையார். நயினார், மூப்பனார் என்று அழைப்பதுண்டு.”) இந்த பெயர்கள் “பட்டம்” (அ) “சுட்டுபெயர்” என சொல்லலாம். பார்க்கவகுல மக்கள் தங்களை அடையாளபடுத்தும் போது பார்க்கவகுல சுருதிமான், பார்க்கவகுல மலையமான், பார்க்கவகுல நத்தமான் என்று கூறுவதுதான் சரியானது. மேலும் சுட்டுபெயரை இணைத்து சொல்லவேண்டும் என்று நினைத்தால் பார்க்கவகுல சுருதிமான் மூப்பனார், பார்க்கவகுல மலையமான் உடையார், பார்க்கவகுல நத்தமான் நயினார் என்று கூறவேண்டும். அல்லது பொதுவாக பார்க்கவகுல உடையார் என்று கூறவேண்டும்.
சில பகுதிகளில் பார்க்கவகுல உட்பிரிவு மக்களை சுருதிமார், மலையமார், நத்தமார் என்றும் அடையாளபடுத்தி உள்ளனர். மேலும் மூப்பனார், உடையார், நயினார் என்று பட்டங்களை மட்டும் சாதி பெயராக பயன்படுத்துவது நமது அடையாளத்தை இழப்பதற்கு சமம். காலமாற்றத்தினால் இந்த குடி பெயர்கள் பல உருமாற்றங்களை கொண்டு சாதியாக விளங்குகிறது. மக்களாட்சி முறையில் அரசு அலுவலக பதிவிலும் மற்றும் பயன்பாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் பெயரில் திருத்தங்களும் மாற்றங்களும் காணப்படுகிறது.
பார்க்கவகுல சமுதாய மக்களை தவிற பிற சமுதாய மக்களுக்கும் பட்டம் (அ) சுட்டுபெயர்கள் உண்டு. அவ்வாறான பெயர்களில் மூப்பனார், உடையார், நயினார் என்பதும் இருக்கிறது. பார்க்கவகுலம் சாராத மூப்பனார், உடையார், நயினார் மக்களின் குடி மரபு பார்க்கவகுலம் கிடையாது அதாவது சுருதிமான், மலையமான், நத்தமான் கிடையாது.
சுருதிமான், மலையமான், நத்தமான் மக்கள் பல பகுதிகளில் பிரிந்து வாழ்ந்ததாலும் இவர்கள் மூவருக்குள்ளும் ஒருவருக்கு ஒருவர் திருமண உறவு இல்லாமல் போனதாலும் மேலும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருந்ததால் இந்த சமுதாயம் வளர்ச்சி காணாமல் ஊர் அறியாமல் போனது. இந்த சமுதாயத்தின் எண்ணிக்கையும் தெரியாமல் போயிற்று. இவர்கள் ஒரு குழுவாக தாங்கள் வசிக்கும் அந்த அந்த பகுதியிலேயே மண உறவும், மக்கள் தொடர்பும் கொண்டதால் பார்க்கவகுல சமுதாயம் ஒன்றுபடாமலும் போனது. மேலும் சிலர் அறியாமையால் தங்களின் குலத்தையும் அடையாளங்களையும் மறந்தும் காப்பாற்றாமல் விட்டுவிட்டனர்.
காலமாற்றத்தினாலும் அறியாமை மற்றும் ஒற்றுமையின்மையாலும் பார்க்கவகுல மக்கள் தங்களின் வரலாற்றை மறந்து வாழ்ந்து வருகின்றனர். சமுதாயமக்கள் நமது வாழ்வியல் முறையிலிருந்து மாறாமல் நமது முன்னேற்றத்திற்க்காக யாரையும் தூக்கிபிடிக்காமல் நாம் ஒன்றுபட்டு முன்னேற உறுதியேற்க்கவேண்டும்.
பார்க்கவகுல மக்களின் வரலாறு திரித்தும், மாற்றபட்டும், மறக்கடிக்கபட்டும், அழிக்கப்பட்டும் வருவதை காணமுடிகிறது. அரசு பதிவுகளில் பார்க்கவகுல உட்பிரிவில் மாற்றங்களையும் குழப்பங்களையும் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
சில மக்கள் முன்னோர் காத்துவந்த வாழ்வியல் முறையையே (இந்து மத வாழ்வியல் முறை) ஆசை, பொன், பெண் போன்றவைக்காக வாழ்வியல்முறையை மாற்றி மாற்று மத அடையாளம் கலாசாரத்துடன் வாழ தொடங்கினர். இவ்வாறாக மதம் மாறியவர்கள் நம்முடைய வரலாற்றையும் உரிமைகளையும் சொந்தம் கொண்டாடியும் மாற்று மத கலாச்சாரத்தை சமுதாயத்தினுள் உட்புகுத்தியும் வருகின்றனர். அவர்கள் மாற்று கலாசாரத்தை கைவிட்டு நம்முடைய இந்து மத வாழ்வியல் முறையையை மீண்டும் தொடர்ந்து முன்னோர்களுக்கும் பார்க்கவகுலத்திர்க்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்பது எங்களின் ஒரு வழிகாட்டுதலாகும். தன்நிலைமறந்து சுயநலத்திற்காக மதம் மாறியவர்கள் பெரும்பாலும் கிருஸ்தவ மதத்தையே பின்பற்றுகின்றனர்.
நம் முன்னோர்கள் காத்துவந்த வாழ்வியல் நெறிமுறையையும், குலதெய்வ வழிபாட்டையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்தி நம்முடைய வாழ்க்கைதரம் உயர்த்த
உணர்வால் இணைவோம்! உறவால் மகிழ்வோம்! குலத்தை காப்போம்!
20ஆம் நூற்றாண்டின் மக்களாட்சி முறையில் சாதிரீதியாக மக்களை அடையாளபடுத்தி உயர்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வை தெரிந்தோ தெரியாமலோ அரசு உருவாக்கிவிட்டது. அதாவது ஒவ்வொரு குடியை சார்ந்த மக்களின் வாழ்வியல்முறை, நிலவுடைமை, தொழில், குடி ஆகியற்றின் அடிப்படையில் சாதிகளாக பிரித்து ஆட்சி செய்யவும் மக்கள் நலத்திட்டங்களை கொடுத்தும் வந்திருப்பதாக அறியமுடிகிறது.
சாதி மதத்தை மையப்படுதியே இந்திய அரசியலும் மாநில அரசியலும் இருக்கிறது. இதனால் தமிழ்நாடு மாநிலத்தில் தீண்டமை இனவெறி போன்றவை வித்தைக்கபட்டு வருகிறது. இந்தியா காலனி ஆதிக்கத்தில் இருந்து பலகட்ட போராட்டங்களுக்கும் உயிர் தியாகத்திற்கும் பிறகு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் சுதந்திரம் பெற்றது.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அணைத்து சமூக மக்களிடத்திலும் ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கு சாதிதான் தீண்டாமைக்கு காரணம் என்றும், சாதியை ஒழிப்பதாகவும் கூறி அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதனால் தான் சார்ந்த சாதிக்கான வளர்ச்சி, உரிமைக்காக சாதிக்கட்சிகள் சங்கங்கள் உருவாகி கிடக்கின்றன.
“இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியலமைப்பில் ஒழிக்கபடாத சாதியா, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் ஆட்சிசெய்தும் ஒழிக்கபடாத சாதியா, இனிவரும் காலங்களில் ஒழிக்க போகிறார்கள்.”
சாதி ஒரு குடியின் அடையாளம். முற்காலத்தில் ஒவ்வொருவருடைய பெயருக்கு பின்னும் குடி பெயர் சேர்ந்து இருந்தது. அது அரசியல் பிழைப்பிற்க்காக குடி பெயர்களை நீக்கி நடைமுறைபடுத்தி விட்டார்கள். ஏற்றத்தாழ்வும் தீண்டமையும்தான் அழிக்கப்பட வேண்டிய ஒன்று. தன்னுடைய பிழைப்பிற்க்காக குடி பெயரை சாதியாக மாற்றி அந்த பெயரின் மூலமாக ஏற்றத்தாழ்வையும் தீண்டமையையும் உருவாக்கி மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
சாதி பெயரால் மட்டும் தான் ஏற்றத்தாழ்வும் தீண்டமையையும் இருப்பதாக மக்களை முட்டாளாக்கி வைத்துள்ளனர். ஆனால் சாதி இல்லாமல் அரசியல் இல்லை.