பார்க்கவகுலம்
பார்கவகுலம் என்பது பாரத கண்டத்தில் தமிழ் பேசும் தென் இந்திய பகுதியில் வாழ்ந்த ஒரு குடி சமுதாய மக்கள். பார்கவகுலம் ஆனது மூன்று உட்பிரிவு வகுப்பு மக்களை கொண்ட சமுதாயமாகும். இவர்கள் சுருதிமான், மலையமான், நத்தமான் வகுப்பை சார்ந்தவர்கள் ஆவார். இந்த மூன்று உட்பிரிவு மக்களுக்கும் மூப்பனார், உடையார், நயினார் என்ற பட்டம் கொண்ட பெயர்கள் உள்ளன.
நோக்கம்
பார்க்கவகுலம் (சுருதிமான்-மலையமான்-நத்தமான்) சமுதாய மக்களின் முன்னேற்றத்தை உருவாக்குவதும் சமுதாய மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதும் சமுதாய பிரச்சனைகளை சரிசெய்வதும் சமுதாயமக்களை பாதுகாக்கவும் சமுதாய மக்களிடத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வளர்ப்பதையே நோக்கமாக்கி செயல்படுகிறோம்.