உடையார் என்ற பெயர் சாதிபெயராக அறியப்படுகிறது. இந்த பெயரானது உடையவர் அதாவது வைத்திருப்பவர் என்று பொருள்படும். அதாவது நிலம் உடையவர், செல்வம் உடையவர் வைத்திருப்பவர் என பொருள்படகூடிய உயர்வு சுட்டு பெயராகும். முற்காலத்தில் புலவர்களால், மக்களால், அறிஞர்களால் வழங்கப்பட்டு அழைக்கப்பட்ட பட்டம் (அ) சுட்டு பெயராகும். இவ்வாறாக பல பெயர்கள் பல்வேறு சமூக மக்களுக்கும் இருக்கின்றன.
உடையார் என்ற பட்டம் வேறு பல இன மொழி பேசும் மக்களிடம் காணப்பட்டாலும் பார்க்கவ குல சமுதாய சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களையும் பொதுவாக உடையார் என்று அழைப்பதுண்டு. சுருதிமான்கள் மூப்பனார் என்ற பட்டம் கொண்டும் இருக்கின்றனர். வேறு சில இன குழுக்களும் மூப்பனார் பட்டம் கொண்டுள்ளனர்.
● மூப்பனார் என்ற பட்டம் பார்கவகுலத்தின் சுருதிமான், முத்தரையர், பள்ளர், கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற பல சாதியினரால் பயன்படுத்தப்படுவதாக செய்தி இருக்கிறது.
● உடையார் என்ற பட்டம் பார்கவகுலத்தின் மலையமான், பார்கவ குலத்தின் நத்தமான், பார்கவ குலத்தின் சுருதிமான், குலாளர், முதலியார், பிள்ளைமார், அகமுடையார் போன்ற பல சாதியினரால் பயன்படுத்தப்படுவதாக செய்தி இருக்கிறது.
சாதி என்பது ஒரு குடியின் ஒத்த பழக்கவழக்கம் உடைய வாழ்வியல் உறவு முறைக்கு குறியிடப்பட்ட பெயர் ஆகும். இது பின்னாளில் சாதி என்ற சொல்லின் கீழ் மக்களால் அடையாளபடுத்தபட்டனர். பிறகுதான் மக்களுக்குள் இன வெறுப்பும், வேற்றுமையும் அதிகமாக உருவாகிற்று. இதற்க்கு காரணம் மக்களை ஆளவேண்டும், அடிமையாக்க வேண்டும், மற்றவர்களைவிட உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சுயநல ஏமாற்றுகாரர்களின் உத்தியே சாதி மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வு. அதன் விளைவாகவே சாதி பெரியதாக பேசப்பட்டு வருகிறது. இதற்க்குமுன் மக்கள் அனைவரும் தனி தனி குடியின் கீழ் கூட்டமாகவும் குழுவாகவும் இனவெறுப்பின்றி இயற்கையோடு வாழ்வாதாரத்திற்க்காக மட்டுமே வாழ்ந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு குடியை சேர்ந்த மக்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் பல்வேறு வகையான தொழில் செய்து வாழ்ந்திருக்க வேண்டும். அது சேவை, உற்பத்தி முதல் அரியணை வரை பல்வேறு வகைகளாக அடங்கும்.
மக்களாட்சி முறை காலத்தில் தொழில் அடிப்படையில் சாதிகளையும் அதன்மூலம் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கி மக்களை ஆட்சி செய்வதை காணமுடிகிறது. இவ்வாறாக தற்போதைய சாதிகள் பல பரிமாணங்களை கடந்து வந்திருக்கின்றது.
பட்டம் பொதுவாக சிறப்பு, கொடை, செயல், பிறப்பு, பக்தி, கல்வி, வீரம் போன்ற பல வீர தீர காரணங்களுக்காக வழக்கபட்டிருக்கிறது. இந்த பட்டங்கள் அணைத்து குடி மக்களுக்கும் அவர்களின் செயல்களை பொறுத்து பல்வேறு காலகட்டங்களில் வழங்கபட்டிருக்கிறது. இந்த பட்டம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே என்றில்லாமல் வீர தீர செயல்களை பொறுத்து பலவகையாக இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் பட்டமானது சாதி பெயராக உருவெடுத்திருக்க வேண்டும். இந்த பட்டங்கள் இப்போதும் வீர தீர செயலுக்காக கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
புராண காலங்களில் இருந்து தற்போதைய காலம் வரை நல்லவர்களை போல் கெடுஞ்செயல் செய்வோரும் வாழ்ந்துவந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கெடும்செயல் செய்வோர் மற்றவர்களை அழிக்க முற்படுவது, செல்வங்களை அபகரிக்க முற்படுவது, பேரசை கொள்வது, கொடுமைகள் செய்வது, வரலாறுகளை அழிப்பது போன்ற பல கெடும்செயல்களை காலம்காலமாக தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
மண், பொன், பெண் ஆசையினால் மக்களை கட்டுப்பாட்டில் அடிமையாக வைத்திருக்க பிரிவினை, ஏற்றத்தாழ்வு போன்றவற்றை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் கட்டுபடுத்தி வைத்திருகின்றனர். இதனாலேயே மக்களிடம் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் காணப்பட்டிருக்கிறது. இவற்றை அறிந்து தீயோரின் வஞ்சக வலையில் சிக்காமல் அனைவரையும் சமமாக பாவித்து சனாதனதர்மத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவருக்கும் வரலாறு கற்றுகொடுக்கும் பாடமாகும்.