இந்து சமயம் (அ) மதம் தோற்றுவித்த காலம் தோற்றுவித்தவர் என எதுவும் இல்லை. இது ஆதி மதம் எனவும் இது ஒரு வாழ்வியல்முறை எனவும் அம்மதத்தை பின்பற்றுவோர் கூறுகின்றனர். இந்த மதத்தில் சைவம், வைணவம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இந்த மதத்தை பின்பற்றுவோர் சிவன், விஷ்ணு, பிரம்மா, இலட்சுமி, சரஸ்வதி, காளி, விநாயகர், முருகன், மதுரைவீரன், கருப்பசாமி, அய்யனார், அம்மன், பஞ்சபூதங்கள் என அதிகமான தெய்வங்களையும், அவதார தெய்வம், குலதெய்வம், இயற்கை என அனைத்தையும் வணங்கி வழிபட்டு வருகின்றனர். இந்து மததில் கடவுள், வழிபாடு, பழக்கவழக்கம் என வேறுபாடுகள் அதிகமாக இருந்தாலும் அவை அனைத்தும் சனாதனதர்மம் என்ற ஒற்றை வாழ்வியல் முறையையே கொண்டது.
நமது இந்து சமய கணக்குப்படி காலம் கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
1. கிருத யுகம் (17,28,000 ஆண்டுகள்)
2. திரேதா யுகம் (12,96,000 ஆண்டுகள்)
3. துவாபர யுகம் (8,64,000 ஆண்டுகள்)
4. கலியுகம். (4,32,000 ஆண்டுகள்)
[கலியுகம் 3102 BCE இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது]
இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
கல்பங்கள்:
1. வாமதேவ கல்பம்
2. சுவேத வராக கல்பம்
3. நீல லோகித கல்பம்
4. ரந்தர கல்பம்
5. ரெளரவ கல்பம்
6. தேவ கல்பம்
7. விரக கிருட்டிண கல்பம்
8. கந்தற்ப கல்பம்
9. சத்திய கல்பம்
10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம்
12. சாரசுவத கல்பம்
13. உதான கல்பம்
14. காருட கல்பம்
15. கெளரம கல்பம்
16. நரசிம்ம கல்பம்
17. சமான கல்பம்
18. ஆக்நேய கல்பம்
19. சோம கல்பம்
20. மானவ கல்பம்
21. தட்புருச கல்பம்
22. வைகுண்ட கல்பம்
23. லெச்சுமி கல்பம்
24. சாவித்ரி கல்பம்
25. கோர கல்பம்
26. வராக கல்பம்
27. வைராச கல்பம்
28. கௌரி கல்பம்
29. மகோத்வர கல்பம்
30. பிதிா் கல்பம்
நாட்காட்டி
இந்து சமயத்தின் நாட்காட்டி பஞ்சாங்கம் ஆகும். தற்போது பயன்படுத்தும் நாட்காட்டியானது பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொது நாட்காட்டி.
இந்து மதம் காலத்திற்கும் இன்றளவும் நிலைத்திருக்க காரணம் இந்து மக்களே. அதாவது இந்து மக்கள் தொடர்ந்து கடைபிடித்து வாழ்ந்து வரும் வாழ்வியல்முறையே. ஆனாலும் இந்து மதத்தையும் அந்த மக்களையும் அழிக்க பல தீயசக்திகளும் மதவெறியர்களும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இந்து மதம் பற்றிய தவறான கருத்துகளை பரப்புவதன் மூலம், பண உதவிகள் திருமணங்கள் வழியாக மதம் மாற்றுவதன் மூலம், இந்து மத பழக்கவழக்கம் வாழ்வியல்முறையை கேளிசெய்வது இகழ்வது போன்றவை மூலம், இந்து மத மக்களின் உரிமையை தடுப்பதன் மூலம், வரலாற்று ஆவணங்களை அழிப்பது மாற்றுவது போன்றவை மூலம், வேற்று கலாச்சார உட்புகுத்தலின் மூலம், இந்து மதத்தை அழிக்க செயல்பட்டு வருகின்றனர்.