உலகம் தோன்றியது தோராயமாக 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்று அறிவியல் கூறுகிறது. ஒவ்வொரு சமயத்தினருக்கும் உலகம் எப்படி எப்போது உருவானது என்பதை ஒரு கதையாக தனது மக்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி வருகின்றனர். அவ்வாறாக உலகம் தோன்றியது பற்றி ஒவ்வொரு சமயமும் ஒரு கருத்து சொல்வதை காணமுடிகிறது. இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது.
உலகம் தோன்றியதிலிருந்து பல உயிர்களையும் இயற்கை பேரழிவுகளையும் சந்தித்து கடந்து வருகிறது. இதில் பல உயிரின மாற்றங்கள், பூகோள மாற்றங்கள் நடந்திருப்பதாகவும் நடப்பதையும் நம்மால் அறிய முடிகிறது. இங்கு உயிரினங்கள் அழிந்தும், புதிய உயிரினங்கள் தோன்றியும், மலைகளும் கடல்களும் உருமாறியும், நகரங்கள் அழிந்திருப்பதையும் நாம் அறிகிறோம். பார்க்கவும் கூட செய்கிறோம். இவ்வாறாக பூகோளஅமைப்பு பல மாறுதல்களுக்கு உட்பட்டு இருக்கிறது.
· பழைய கற்காலத்திற்கு முந்தைய காலம் தெரியவில்லை.
· பழைய கற்காலம்
· புதிய கற்காலம்
· செம்பு காலம்
· வெண்கலகாலம்
· இரும்பு காலம்
· சங்க காலத்திற்க்கு முந்தைய காலம்
· சங்க காலம்
· சங்கம் மருவிய காலம்
· வரலாற்று காலம்
· நவீன காலம்
கற்காலத்தில் இருந்து சங்ககாலம் தொட்டு மன்னர் ஆட்சி முதல் தற்போதைய மக்களாட்சி வரை ஒரு இனமோ (அ) குடும்பமோ (அ) சந்ததியோ வீழ்வது புகழுடன் வாழ்வது எல்லாம் அணைத்து சமூக சமுதாய மக்களுக்கும் இயல்பான ஒன்றே. இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், வீரன், வெற்றிகொண்டவன், தோற்றவன், வரலாற்றை அழிப்பது, வரலாற்றை மாற்றுவது, கலாச்சாரத்தை உருவாக்குவது, கட்டிக்காப்பது என்பதெல்லாம் பலத்தையும் திறமையையும் வைத்தே நடந்திருக்கிறது. தற்போதைய காலத்திற்க்கு முன் பல நூற்றாண்டுகள் மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவற்றின் காலங்கள் உறுதியாக குறிப்பிட முடியாமல் சிறு சிறு ஆதாரங்களை வைத்து யூகத்தின் அடிப்படையில் பலவற்றை குறிப்பிட்டு வருகின்றனர். வரலாறுகள் அவ்வாறே உருவாக்கப்படுவது உரிமைகொள்வது அதன்படி கொண்டாடுவது என காலம் கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் சங்கம் நடந்ததை அடிப்படையாக கொண்ட காலகட்டமே சங்ககாலமாகும். இது கி.மு 500 முதல் கி.பி 300 வரையான காலம் என்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கி.மு என்பது கிறிஸ்து பிறப்புக்கு முன் என்றும் கி.பி என்பது கிறிஸ்து பிறப்புக்கு பின் என்றும் குறிப்பிட்டதை வரலாற்று காரணங்களுக்காக தற்போது பெயர் மாற்றி வைத்துள்ளனர். தமிழ்சங்கமானது முதல்சங்கம், இடைசங்கம், கடைசங்கம் என்று மூன்று முறை தமிழுகாக சங்கம் வைத்தார்கள் நம் முன்னோர்கள். இது வெவ்வேறு காலகட்டங்களில் நடந்திருப்பதாக வரலாறுகள் கூறுகிறது. முதன்முதலில் உருவான தமிழ்சங்கம் முதல்சங்கம் எனவும், இரண்டாவதாக உருவான தமிழ்சங்கம் இடைசங்கம் எனவும், மூன்றவதாக மற்றும் கடைசியாக உருவான தமிழ் சங்கம் கடைச்சங்கம் எனவும் கூறுகின்றனர்.
வரலாற்றுபடி கடைசங்கம் நடந்த காலத்தையே சங்ககாலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறிவந்தனர் மேலும் அவ்வாறே புத்தகங்களில் படித்தும் வருகிறோம். தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் மையமாக கொண்டதே தமிழ்சங்கமாகும். அதன் பின் தற்போதைய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடத்தி தமிழுக்கு தமிழருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
● முதல்சங்கம் காலத்தில் கடல் கொண்ட தென்மதுரை இருந்ததாக கூறுகின்றனர். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். முதல் சங்க காலம் 4440 ஆண்டுகள் எனப்படுகிறது. தலைச் சங்க காலம் என்றும் அழைக்கப்படும் முதல் சங்க காலம் கிமு 9600 முதல் கிமு 5200 வரை நீடித்தது. முதல் சங்க காலம் மிக நீண்ட காலம் நீடித்தது. கடவுளர்கள், முனிவர்கள் (அகத்தியனார், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுள், குன்றெறிந்த முருகவேள்) மற்றும் 4449 புலவர்கள் இருந்திருப்பதாக கூறுகிறது நூல்கள். இச்சங்கத்தில் இயற்றப்பட்ட இலக்கியங்கள் எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இறையனார் களவியல் உரை என்பது, இறையனார் எழுதிய அகப்பொருள் இலக்கண நூலான "இறையனார் அகப்பொருள்" அல்லது "இறையனார் களவியல்" என்ற நூலுக்கு, சங்கப் புலவரான நக்கீரர் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) எழுதிய விளக்கம் ஆகும். இது தமிழில் தோன்றிய முதல் உரைநடை நூல் என்று கருதப்படுகிறது. தென்மதுரை கடலில் மூழ்கியதால் சங்கம் அழிந்ததாக கூறுகின்றது நூல்கள்.
● இடைச்சங்கம் அல்லது இரண்டாம் சங்கம். கி. மு. 3000 முதல் 1500 வரை முதல் சங்கமிருந்த தென்மதுரை அழிந்து போகவே மீண்டும் சங்கத்தை உருவாக்க எண்ணிய “பாண்டிய மன்னம் கடுங்கோன்” என்பவன் கபாடபுரத்தை அமைத்து அதில் இடைச்சங்கத்தை நிறுவி தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தான்.
● கடைச்சங்கம் சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர். 1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் குறித்து உறுதியான வரலாற்று ஆதாரம் இல்லை. ஆனாலும் திருவள்ளுவர் கலியுகத்தின் ஆரம்ப காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம். திருவள்ளுவரின் காலம் குறித்த கருத்துக்கள் தமிழறிஞர்களின் கூற்றுப்படி திருவள்ளுவர் கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்றும் இதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடுகிறார்கள்.
சில ஆய்வாளர்கள், திருவள்ளுவரை சங்க இலக்கியக் காலத்தவராகவும் கி.மு 3-ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 1-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர். சில மதிப்பீடுகள், திருவள்ளுவர் கி.பி 5-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும் தெரிவிக்கின்றன. திருவள்ளுவரின் பிறப்பு, இறப்பு குறித்து அதிகாரபூர்வமான வரலாற்றுச் சான்றுகள் இல்லாததே இந்தக் கால வேறுபாட்டிற்குக் காரணம்.
மொத்தத்தில், திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்பதும், அவரது காலம் குறித்த உறுதியான காலக்கோடு இல்லை என்பதும் முக்கியமானது.
சங்க காலத்திற்குப் பிந்தைய காலம் சங்க மருவிய காலம் எனப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் தோன்றின. தமிழரின் பொற்காலம் எனக் கருதப்படுவது சங்க காலமாகும். சேர, சோழ, பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் என பலர் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். சங்க கால மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு, களப்பிரார்கள் எழுச்சி பெற்று ஆட்சி செய்தனர்.
பல்லவர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர்கள், சமணர்கள், சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், வேளிர்கள் என பலர் தமிழகத்தின் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளை ஆண்டு வந்திருக்கின்றனர். இவ்வாறாக இவர்கள் எழுச்சிபெற்று அரசால்வதும் வீழ்வதும் என பல நூற்றாண்டுகளாக இருந்திருக்கின்றனர். இங்கு கூறப்படும் பெயர்கள் இனக்குழுவின் பெயராகவும் தலைவனின் சுட்டு பெயராகவும் நிலபகுதிகளின் பெயராகவும் அடையாளப்படுத்த குறிப்பிடப்பட்ட பெயர்களாக இருந்திருக்கும். இதேபோன்று உலகம் முழுவதிலும் பல இனகுழுக்களும் அதன் எழுச்சியும் புதிதாக சமயங்களும் தோன்றியிருக்கலாம் வீழ்ச்சியடைந்திருக்கலாம்.
இந்துமதம் மட்டும் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று எந்தவொரு ஆவணமும் உரிமைகோரலும் இல்லை. இதனால் இதை ஆதி மதம் என்றும் இந்துமதம் என்பது ஒரு வாழ்வியல்முறை நம்பிக்கை சார்ந்தது என்றும் கூறுகின்றனர் அம்மதத்தினர். ஆனால் பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம் என பல சமயங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக கருத்து இருக்கிறது. இவ்வாறாகவே மொழிகளும் உருவாகி உருமாறி அழிந்தது என காலம் கடந்து வந்திருக்கிறது. அவ்வாறாகவே ஒவ்வொரு மொழியும் அதன் எழுத்து வடிவங்களும், மொழி நடையும் மாற்றங்களை கண்டிருக்கின்றன.
சேர, சோழ, பாண்டிய தேசங்களை ஆண்ட மன்னர்கள் சங்க காலத்திற்க்கு முன்பிருந்து பிற்காலம் வரை தமிழகத்தை அதிகமாக ஆண்டிருக்க முடியும். அதன்படியே சேர தேசத்தை ஆண்டவர்கள் சேரர்கள், சோழ தேசத்தை ஆண்டவர்கள் சோழர்கள், பாண்டிய தேசத்தை ஆண்டவர்கள் பாண்டியர்கள் என்று கூறியிருக்க வேண்டும்.
பொதுவாகவே காலத்திற்க்கு ஏற்றாற்போல் மனிதர்களின் வாழ்க்கை பலவாறாக மாறுபட்டிருக்கிறது. அதன்படி வரலாறுகள் அழிக்கப்பட்டிருக்கிறதும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் உண்மையே. அதனாலேயே இன்றும் மக்கள் சரியான புரிதலின்றி குழப்பத்திலும் பல சமுதாய மக்கள் குல பெருமை வேண்டியும் வரலாற்றை தேடியும் திரித்தும் வருகின்றனர். அவ்வாறாக பொய்யான ஆவணங்கள், கல்வெட்டு செய்திகள், இலக்கியநூல்கள், புலவர் பாடல்வரிகளை மேற்கோள் காட்டி திரித்து கூறியும் வரலாற்றை உருவாக்கி வருகின்றனர்.
எதுவாயினும் இன்று முதல் பார்க்கவகுலம் சமுதாயத்தை சார்ந்த சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களும் தன்னை உணர்ந்து தன் குலத்தை பாதுகாக்கும் படியாக இருக்கவேண்டும். பார்க்கவகுலத்தின் வருங்கால தலைமுறையான நம் குழந்தை செல்வங்களுக்கு சமுதாயம், கல்வி, வீரம், வாழ்வியல்முறை, கலாசாரம், இனக்குழுக்களின் எழுச்சி, வீழ்ச்சி, சூது பற்றிய புரிதலுடன் கூடிய வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கி தர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை சொல்லி சமுதாயபணியில் பங்குபெறுவோம் முன்னேற்றமடைவோம்.