பொதுவாக தற்போது மனித சமூகத்திடம் சங்கம் / அறக்கட்டளை பொதுநல நோக்கத்திற்காக உருவாகியிருக்கிறது. அத்தகைய சங்கங்கள் தொழில் சார்ந்து, குடி/சாதி சார்ந்து, பதவி சார்ந்து, மதம் சார்ந்து மற்றும் பல காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒத்த கருத்துடைய மக்கள் குழு (அ) கூட்டமாகும். இந்த சங்கங்கள் நலத்திட்டங்களையும், பாதுகாப்பையும், கூட்டமைப்பையும், சேவையையும் நோக்கங்களாக கொண்டு உருவாக்கி இருக்கிறர்கள்.
கால மாற்றத்தினாலும், சமுதாய உணர்வின்மையினாலும் பார்க்கவகுலம் சமுதாயம் அழிந்து வருவதை தடுத்து சமுதாய மக்களின் முன்னேற்றத்தையும் சமுதாய பாதுகாப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உறுதிபடுத்தவே பார்க்கவகுலம் இந்து மக்கள் முன்னேற்ற சங்கம் செயல்படுகிறது.
உலகம் முழுவதிலும் மக்கள் நிலப்பகுதி, வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், உறவுமுறை, குடும்பம், கலாசாரம், கடவுள், வழிபாடு, தொழில், கல்வி, உணவுமுறை, நன்மை, தீமை போன்றவற்றை வரையறுத்து அதை அடிப்படையாக கொண்டே தனி பெயருடைய மனித குலமாக (அ) குழுவாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வாழ்க்கைமுறையே காலகட்டத்திற்கு ஏற்றார்போல் பெயர்கொண்டு அழைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே சாதி, மதம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. இங்கு சாதி, மதத்திற்குள்ளும் பல கிளை பெயர்கள் இருப்பதாக அறியமுடிகிறது.
ஒவ்வொரு தனிபெயருடைய இனக்குழுக்களும் வாழ்வியல் கட்டமைப்புடன் அந்த மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் குழுவாக (அ) சாதியாக செயல்பட்டிருக்கிறது. இங்கு சாதியானது சமுதாய கட்டமைப்பை காலம் கடத்தி அதன்படி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறனர். அப்படி ஒரு தனிப்பெயருடைய மனித சமுதாயமே பார்க்கவகுலம் என்ற சுருதிமான், மலையமான், நத்தமான் மக்கள் சமுதாயம்.
சாதியானது மக்களின் முன்னேற்றத்திற்க்கும் பாதுகாப்புக்கும் அரணாக உள்ள மக்கள் சக்தி என்றே பார்க்கவகுல இந்து மக்கள் முன்னேற்ற சங்கம் கூறுகிறது.
ஒவ்வொரு சமுதாய மக்களின் முன்னேற்றம், கட்டமைப்பு, பாதுகாப்பு, வாழ்வியல் முறை போன்றவற்றில் சமுதாய சங்கம் முக்கிய பங்குவகிக்கிறது. மேற்கண்டவற்றில் குறைபாடுகள் இருக்கும்போது அந்த சங்கம் செயலற்று போகிறது. சமுதாய சங்கம் அந்த மக்களுக்கான பாதுகாப்பு, முன்னேற்றம், மக்கள் தொடர்பு ஆகியவற்றில் செயல்படாமல் போனால் மக்களுக்குள் மற்றொரு சங்கம் உருவாகிறது.
மக்களாட்சியில் துறைக்கு ஒரு சங்கம், தொழிலுக்கு ஒரு சங்கம் என்று பல சங்கங்கள் அந்தந்த துறை மற்றும் தொழில் சார்ந்த மக்கள் நலனுக்காக உருவாகி செயல்படும் போது சமுதாய மக்களின் நலனுக்கா செயல்படும் சாதிய சங்கங்களும் சாதிய அமைப்புகளும் தேவையே. ஆனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளே கலையவேண்டும் என்று பார்க்கவகுல இந்து மக்கள் முன்னேற்ற சங்கம் கூறுகிறது.
சாதியானது மக்களின் முன்னேற்றத்திற்க்கும் பாதுகாப்புக்கும் துனையாக உள்ள மக்கள் சக்தியே. மக்கள் தங்களின் சுயநலத்திற்காகவும் ஆதிக்கத்திற்காகவும் மாற்று சாதிய குலத்தை ஏமாற்றுவதும், தாழ்த்துவதும், துன்புறுத்துவதும், முன்னேற்றத்தை தடுப்பதையும் வைத்தே சாதிய ஏற்றதாழ்வானது உருவாகியிருக்கிறது. மக்களே ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றனர், சாதி ஏற்றத்தாழ்வை உருவாக்கவில்லை.
மக்களாட்சி சமூகத்தில் சாதியில்லை என்று சொல்லி மக்ககளை ஏமாற்றி வருகின்றனர். அவர்களே ஏற்றதாழ்வையும் உருவாக்குகின்றனர். பலம், அதிகாரம், பதவி, தொழில், வாழ்க்கைமுறை இவற்றை மையப்படுத்தியே ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதில் ஒரு சாரார் முன்னேறியும் மற்றொரு சாரார் பின்தங்கியுமே இருப்பார்கள். இதனால் ஏற்றத்தாழ்வுகள் மக்களிடத்தில் தொடருமே தவிர அனைவரும் சமம் என்ற சொல் வெறும் சொல்லலவில் மட்டுமே இருக்கும்.
மன்னர்கள் நாட்டை ஆண்ட காலத்தில் தன்னை பற்றியும் தன் குலம் பற்றியும் தன்னுடைய ஆட்சி முறை அரசாண்ட காலம் போன்ற பல தகவல்களை நாட்டுமக்களுக்கும் சந்ததியினருக்கும் தெரிவிக்க கல்வெட்டுகளில், புலவர் பாடல்களில், ஓலைச்சுவடிகளில், செப்பு தகடுகளில் குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. இவற்றை கொண்டு பின்னால் வரும் சந்ததிகள் மற்றும் நாட்டுமக்கள் அவர்களின் குலம், வீரம், கொடை, ஆட்சிமுறை போன்ற பலவற்றை தெரிந்துகொள்ளவும் பின்பற்றி வாழவும் வழிசெய்தனர்.
மன்னர் ஆட்சியில் வீரம், போர்த்திறன், சூழ்ச்சி ஆகியவற்றால் சாம்ராஜியங்கள் உருவாகியும் வீழ்ந்தும் இருக்கிறது. மேலும் ஐரோப்பியர் வருகை, முகலாயர் வருகை, ஆங்கிலேயர் வருகை என நாடும் நாட்டுமக்களும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்கிகொண்டனர். இதானால் வரலாற்று ஆவணங்களும் சின்னங்களும் அழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு தற்போதைய காலத்தில் வரலாறுகளை அறியமுடியாதபடியும் கிடைக்கபெறாமலும் போய்விட்டன. முழுமையாக எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை. ஒரு இனத்தின் அடையாளத்தை அழித்துவிட்டால் அந்த இனமே நாளடைவில் காணாமல் போய்விடும் என்பதே உண்மை.
மக்களை பிரித்து, அவர்களின் வரலாறுகளை அழித்தும், மறக்கடித்தும் ஒவ்வொரு சமூகமும் இருந்துள்ளதாக புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான கால நகர்வுகள் அணைத்து காலகட்டத்திலும் இருந்திருக்கின்றன. அவர்களோடு அவர்களின் வரலாறுகளும் மறைந்தும், அழிந்தும், காணாமலும் போனது. அதன்படியாகவே பார்க்கவகுல குறிப்புகள் எதுவும் முழுமையாக கிடைக்கவில்லை.
பார்க்கவகுலம் ஒரு இந்து கலாசாரம் மற்றும் வழிபாட்டு முறையை கொண்ட மக்கள் சமுதாயமே. பாரத கண்டத்தின் இந்தியாவில் சங்ககாலம் தொட்டே பார்க்கவகுல மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பார்க்கவகுல வழித்தோன்றல் மன்னர்கள் சைவ கடவுளான சிவனையும் வைணவ கடவுளான விஷ்ணுவையும் போற்றி வணங்கி வழிபட்டனர். பார்க்கவகுல மக்கள் குலதெய்வ வழிபாடு முறை கொண்டவர்கள்.
ஆழ்வாரும் நாயன்மாரும் பிறந்த சமுதாயம் பார்க்கவகுலம். பார்க்கவகுல முன்னோர்கள் பெரிய சிவ திருத்தலங்களை (சிவன் கோவில்) கட்டியிருக்கிறார்கள். கிருஸ்தவம், இஸ்லாம் வழிபாட்டு முறை நமது நாட்டில் நம்முடைய செல்வங்களை கொள்ளையடிக்க வந்தவர்கள் விட்டு சென்றது மற்றும் சில மக்களால் உயிருக்கு பயந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட மத வழிபாட்டு முறை.
பார்க்கவகுலத்தவர்கள் வீரத்திலும் தான் கொண்ட பக்தியிலும் வழிமாறாதவர்கள். இன்றும் மதமாற்றம் அணைத்து சமுதாயத்திலும் புகுந்து அவர்களை தன்னிலை அறியாது மதம் விளைவிக்கபடுகிறது. பார்க்கவகுலத்தவர்களும் அவர்களின் முன்னோர்களும் இந்து கலாசார வழிபாட்டு வாழ்வியல் முறையை கொண்டவர்கள் மட்டுமே. பார்க்கவகுலத்தை அழிக்க நினைக்கும் மற்றும் வரலாற்றை திரித்து உருவாக்க நினைக்கும் விசமிகளால் செய்யப்படும் வேலையே மதம் தடையில்லை, வாழ்வியல் முறை தடையில்லை, எம்மதமும் சம்மதம், நாங்களும் நீங்களும் ஒன்று என்பன போன்ற கோசங்கள். பார்க்கவகுல மக்கள் இந்து கலாசாரமுறை (அ) வழிபாட்டு முறை மட்டுமே கொண்டவர்கள்.
உணர்வால் இணைவோம்!
உறவால் மகிழ்வோம்!
குலத்தை காப்போம்!
பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது, அதை உருவாக்கவும் அனுமதிக்காதீர்.
சாதிய சமுதாய கட்டமைப்பு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தேவை. அது தான் அந்த சமுதாயத்தின் ஒற்றுமை, கட்டமைப்பு, தேவை, பாதுகாப்பை உறுதிபடுத்தும்.
சமுதாயத்தை நேசி, சமுதாயத்தை உயர்த்தி பங்குகொள்.
உங்களின் அடுத்த தலைமுறைக்கு நல்லதை உருவாக்குங்கள்.
பிற்காலத்தில் பார்க்கவகுலத்தவர்கள் செல்வந்தர்களாகவும், நிலவுடமை உடையவர்களாகவும், விவசாய தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.