பார்க்கவகுலம்

பார்கவகுலம் என்பது பாரத கண்டத்தில் தமிழ் பேசும் தென் இந்திய பகுதியில் வாழ்ந்த ஒரு குடி சமுதாய மக்கள். பார்கவகுலம் ஆனது மூன்று உட்பிரிவு வகுப்பு மக்களை கொண்ட சமுதாயமாகும். இவர்கள் சுருதிமான், மலையமான், நத்தமான் வகுப்பை சார்ந்தவர்கள் ஆவார். இந்த மூன்று உட்பிரிவு மக்களுக்கும் மூப்பனார், உடையார், நயினார் என்ற பட்டம் கொண்ட பெயர்கள் உள்ளன.

 

நோக்கம்

பார்க்கவகுலம் (சுருதிமான்-மலையமான்-நத்தமான்) சமுதாய மக்களின் முன்னேற்றத்தை உருவாக்குவதும் சமுதாய மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உதவுவதும் சமுதாய பிரச்சனைகளை சரிசெய்வதும் சமுதாயமக்களை பாதுகாக்கவும் சமுதாய மக்களிடத்தில் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் வளர்ப்பதையே நோக்கமாக்கி செயல்படுகிறோம்.

 

பார்க்கவகுலம் சமுதாயம் பற்றிய சில முக்கிய குறிப்புகள்

சாதி (அ) இனம்         :     பார்க்கவகுலம்

உட்பிரிவு                             :     சுருதிமான், மலையமான், நத்தமான்

மதம்                                     :     இந்து

மொழி                                  :     தமிழ்

வழிபாட்டு முறை               :     குலதெய்வம், சைவம், வைணவம் மற்றும் இதர இந்து தெய்வங்களின் வழிபாடு.

சுட்டுபெயர்கள்         :     உடையார், மூப்பனார், நயினார்

உணவு பழக்கவழக்கம்     :     சைவம் மற்றும் அசைவ உணவுகள்

 

பாரத கண்டத்தில் இந்தியாவின் தென் பகுதியில் குறிப்பாக தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளில் பரவலாகவும் வேலை மற்றும் குடியேற்றம் காரணமாக வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் பார்க்கவகுலம் சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்த சமுதாயத்தில் பார்க்கவகுல ஆண்மக்களை பார்க்கவன் என்றும் பெண்மக்களை பார்க்கவி என்றும் குறிப்பிடுகின்றனர்.

 

கொள்கைகள்

  இந்து சமயம் சனாதனதர்மம் கலாசார வாழ்வியல் முறையை கொண்ட ஒரு மக்கள் சமுதாயம்.

  சாதி என்பது ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கம் உடைய சமூக மக்களின் குடி (அ) வம்சம் (அ) சந்ததியினரின் குடும்ப பெயர்.

  சாதிகள் இருப்பதில் தவறில்லை. ஏற்றதாழ்வு ஒன்றே இருக்க கூடாத ஒன்று.

  எல்லோருடனும் நட்பு பாராட்டி அனைத்து சமூக மக்களையும் மதிக்க வேண்டும்.

  திறமை மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படையில் மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை கொடுக்க வேண்டும்.

  மதமாற்றத்தை தடுக்க வேண்டும்.

 

கோஷம்

உணர்வால் இணைவோம்!

உறவால் மகிழ்வோம்!

குலத்தை காப்போம்!

 

பாரத நாடு (அ) இந்திய நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு பார்க்கவகுல மக்களை கீழ்கண்டவாறு அரசு பதிவில் பதிவுசெய்து குறிக்கின்றனர்.