உணர்வால் இணைவோம்! உறவால் மகிழ்வோம்! குலத்தை காப்போம்!
உணர்வால் இணைவோம்! உறவால் மகிழ்வோம்! குலத்தை காப்போம்!
சுருதிமான் - மலையமான் - நத்தமான்
பார்க்கவகுலம் (சுருதிமான், மலையமான், நத்தமான்) ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையை கொண்ட மனித சமூகத்தின் சாதி (அ) இனம் (அ) குலத்தின் பெயர். பார்க்கவகுலத்தில் சுருதிமான், மலையமான், நத்தமான் என மூன்று உட்பிரிவுகள் இருக்கிறது. இவர்களே பார்க்கவ குலத்தவர்கள்.
பார்க்கவகுலம் ஒரு இந்து சமுதாய கலாச்சார வாழ்வியல் முறைகளை கொண்ட ஒரு மக்கள் சமுதாயம். கால மாற்றத்தினாலும், சமுதாய உணர்வின்மையினாலும் பார்க்கவகுலம் அழிக்கப்பட்டு வருவதை தடுத்து சமுதாய மக்களின் முன்னேற்றத்தையும் சமுதாய பாதுகாப்பையும் உறுதிபடுத்துவதையே பார்க்கவகுல இந்து மக்கள் முன்னேற்ற சங்கம் நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
பாரத கண்டத்தில் இந்தியாவின் தென் பகுதியில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற பகுதிகளில் பரவலாகவும் வேலை மற்றும் குடியேற்றம் காரணமாக அயல்நாடுகளிலும் பார்க்கவகுல சமுதாயத்தை சார்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்த சமுதாயத்தில் பார்க்கவகுல ஆண்மக்களை பார்க்கவன் என்றும் பெண்மக்களை பார்க்கவி என்றும் குறிப்பிடுகின்றனர்.
பார்க்கவகுலம் சமுதாயம் பற்றிய சில முக்கிய குறிப்புகள்
சாதி (அ) இனம் (அ) குலம் : பார்க்கவகுலம்
உட்பிரிவு : சுருதிமான், மலையமான், நத்தமான்
மதம் : இந்து
மொழி : தமிழ்
வழிபாட்டு முறை : குலதெய்வம், சைவம், வைணவம் மற்றும்
இதர இந்து தெய்வங்களின் வழிபாடு மட்டும்
சுட்டுப்பெயர்கள் : உடையார், மூப்பனார், நயினார்
உணவு பழக்கவழக்கம் : சைவம் மற்றும் அசைவ உணவுகள்
பாரத நாடு (அ) இந்திய நாடு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பிறகு பார்க்கவகுல மக்களை கீழ்கண்டவாறு அரசு பதிவில் பதிவுசெய்து குறிக்கின்றனர்.
குறிப்பு:
பார்க்ககுலத்தில் மூன்று (சுருதிமான், மலையமான், நத்தமான்) உட்பிரிவுகள் மட்டுமே உள்ளது.
பார்க்கவகுலத்தின் உட்பிரிவு சுருதிமான் மக்களுக்கு மூப்பனார் என்றும் மலையமான் மக்களுக்கு உடையார் என்றும் நத்தமான் மக்களுக்கு நயினார் என்றும் சுட்டுப்பெயர்கள் உள்ளன.
பிற சமுதாய மக்களுக்கும் மூப்பனார், உடையார், நயினார் என்ற சுட்டுப்பெயர்கள் இருக்கிறதது என்பது குறிப்பிடதக்கது. அதனால் அவர்களும் பார்க்கவகுலத்தவரும் ஒரே குலம் என்று கூற இயலாது.
பெரும்பாலும் பார்க்கவகுல மக்கள் தங்களை வெறுமன உடையார், மூப்பனார், நயினார் என்று கூறுவது தவறு. பார்க்கவகுல உடையார் (அ) பார்க்கவகுல மலையமான் உடையார் என்றும், பார்க்கவகுல மூப்பனார் (அ) பார்க்கவகுல சுருதிமான் மூப்பனார் என்றும், பார்க்கவகுல நயினார் (அ) பார்க்கவகுல நத்தமான் நயினார் என்றுதான் கூறவேண்டும்.
மாற்று மத சமுதாய மக்களும் தங்களை பார்க்கவகுல சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று பல இடங்களில் கூறியும் உருவாக்கியும் வருகின்றனர். இவர்கள் மதம் (வாழ்வியல்முறை) மாறியவர்களாகவும் மதத்தை பரப்புபவர்களாகவும் இருக்கலாம்.
காலமாற்றத்தினாலும் அறியாமை மற்றும் ஒற்றுமையின்மையாலும் பார்க்கவகுல மக்கள் தங்களின் வரலாற்றை மறந்து வருகின்றனர்.
பார்க்கவகுல மக்களின் வரலாறு திரித்தும், மாற்றபட்டும், அழிக்கப்பட்டும் வருவதை காணமுடிகிறது. மாற்று மதத்தினர் பார்க்கவகுலத்தை உரிமைகொண்டாடி வருகின்றனர். அரசு பதிவுகளில் பார்க்கவகுல உட்பிரிவுகளில் சில மாற்றங்களையும் காணவும் முடிகிறது.